பெங்களூரு: பெங்களூரு பல்கலை அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், டாக்டர் பட்டத்தை தான் படித்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கவுரவ டாக்டர் பட்டம்:
பெங்களூரு பல்கலைகழகத்தின் 52வது பட்டமளிப்பு விழா நாளை(ஜன.,27) நடைபெறவிருந்தது. இவ்விழாவில் இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க அந்த பல்கலை., முடிவு செய்திருந்தது. இக்கவுரவ டாக்டர் பட்டத்தினை டிராவிட் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
படித்து பெறுவேன்:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: என்னை மதித்து, கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த பெங்களூரு பல்கலைக்கு முதலில் எனது நன்றி. கவுரவ டாக்டர் பட்டம் வாங்குவதைவிட, அதனைப் படித்துப் பெறுவதையே விரும்புகிறேன். விளையாட்டு துறை தொடர்பான ஆராய்ச்சியை செய்துவிட்டு, பின்பு முறையாக டாக்டர் பட்டத்தை பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், கடந்த 2014-ம் ஆண்டில் குல்பர்கா பல்கலை அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தையும் வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
English summary:
Bangalore : Bangalore University and an honorary doctorate degree from the former Indian cricketer Rahul Dravid refused to buy, the doctor said to get just reading the title.