புதுடில்லி: ஒரே மாதத்தில் ஜன் தன் கணக்குகளில் இருந்து சுமார் 5,500 கோடி ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு வட்டி சுமை குறைவதாக கருதப்படுகிறது.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் மொத்தம் 25.68 கோடி ஜன் தன் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இதில் கடந்த டிசம்பர் 7 ம் தேதி வரை 74,610 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த பணம் கடந்த ஜன.,11ம் தேதி 69,027 கோடியாக குறைந்தது. அதாவது ஓரே மாதத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 5,500 கோடி ரூபாய் பணத்தை திரும்ப எடுத்துள்ளனர்.
முதலீடுகள் சரிவு:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்த கடந்த நவ.,8 ம் தேதி நடப்பில் இருந்த மொத்த 25.5 கோடி ஜன் தன் கணக்குகளில் மொத்தம் 45,653.61 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த முதலீடு டிச., 7 ம் தேதியில் கிட்டத்தட்ட இருமடங்காக சுமார் 75 ஆயிரம் கோடியை எட்டியநிலையில் தற்போது மீண்டும் முதலீடுகள் சரிய துவங்கியுள்ளன.
1.5 கோடி புதிய கணக்குகள்:
நாட்டில் பணப்புழக்கம் பெரும்பாலும சீரடைந்துள்ள நிலையில் இந்த முதலீட்டு சரிவு வங்கிகளுக்கு வட்டி சுமையை குறைந்ததுள்ளதாகவே கருதப்படுகிறது. நோட்டுகள் செல்லாது என்ற அறவிப்பிற்கு பின் சுமார் 1.5 கோடி புதிய ஜன் தன் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
New Delhi, Jan its accounts in one month to return the money taken from the nearly 5,500 crore. This is intended to reduce the burden of interest to the banks.