திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மழையின்மையால் விவசாயம் பாதித்த பகுதிகளை கலெக்டர், அரசின் முதன்மை செயலாளர். அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும் எனவும் விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை, நாகையை தொடர்ந்து தென்மாவட்டங்க
ளிலும் விவசாய பாதிப்பு இறப்புகள் துவங்கியுள்ளன.
9ம் தேதி அரசுக்கு அறிக்கை:
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.கலெக்டர் கருணாகரன், நெல்லை மாவட்டத்திற்கான கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார், ஆதிதிராவிடதுறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் இன்று காலை ஆய்வு துவங்கினர். நெல்லை மானூரை அடுத்துள்ள கானார்பட்டி, வன்னிக்கோனேந்தல், ஆயாள்பட்டி, சங்கரன்கோவில் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிட்டனர். மழையின்றி கருகிகிடக்கும் நெல்வயங்கள், பயிர் பயிரிடப்பட்ட நிலங்களை பார்வையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 9ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் வறட்சி குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
English Summary:
Tirunelveli, Tirunelveli District Collector in the drought affected areas of agriculture, the state's chief secretary.