தஞ்சாவூர் : பருவ மழை பொய்த்ததாலும், காவிரி மற்றும் மேட்டூரில் தண்ணீர் இல்லாததாலும் கடும் வறட்சி சோகத்தில் இறக்கும் விவசாயிகள் மரணம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பருவமழை பொய்த்ததால் மழையை நம்பி நாற்று நட்ட விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
மனம் நொந்த விவசாயிகள்:
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது. மேலும் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. பலரும் தங்களின் ஆழ்குழாய் கிணறு ஆழப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கடன் வாங்கியவர்கள் நிலத்தை குத்தகைக்கு பெற்றவர்கள் பெரும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மனம் நொந்த விவசாயிகள் மாரடைப்பாலும், விஷம் குடித்து இறந்து வருகின்றனர். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகள் பரவலாக இறந்துள்ளனர். இன்றும் நாகை வெண்மணி மேலவாய்க்குடி கிராமத்தில் தம்புசாமி என்பவர் இறந்துள்ளார். நாகையில் மட்டும் இதுவரை 33 பேர் இறந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary:
Thanjavur: monsoon, drought and lack of water in the Cauvery Mettur in grief and death and dying farmers is growing day by day. If you rely on scanty monsoon rains planting farmers are struggling, unable to continue farming.