புதுடில்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரும் முயற்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார் என துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறினார்.காங்கிரஸ் கட்சி தான் தமிழர்களுக்கு இன்னல் : ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தம்பித்துரை தலைமையில் எம்.பி.,க்கள் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்;
அவசர சட்டம் தொடர்பாக அமைச்சரிடம் பேசினோம். தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும். என மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தோம், தடை பட்டியலில் இருந்து காளைகளை நீக்கிட வலியுறுத்தினோம். இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தான் தமிழர்களுக்கு இன்னல் தந்தது.
இவர்களுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் மக்களை ஏமாற்றியது. இவர்கள் தான் தடைக்கு காரணம். 2014 க்கு பின்னர் பா.ஜ.,வும் முழு அக்கறை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த அவசர சட்ட திருத்தம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.
English summary:
NEW DELHI: Tamil Nadu Jallikattu emergency legislation to try to hold the federal government would give full cooperation to the Union Home Minister Rajnath Singh had assured the Deputy Speaker Thambidurai told reporters.