புதுடில்லி : ‛‛2019 ம் ஆண்டில் இல்லை, 2090 ம் ஆண்டு ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் இனி ஆட்சிக்கு வர முடியாது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டில்லியில், நேற்று நடந்த காங்., தேசிய மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், ‛2019 ம் ஆண்டு மத்தியில் மீண்டும் காங்., ஆட்சிக்கு வரும் போது தான் நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கும்' என்றார். ராகுலின் இந்த கருத்திற்கு மத்திய அமைச்சர் வெங்ககையா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா,‛‛, ராகுல் பகல் கனவு காண்கிறார். 2019 ம் ஆண்டு நல்ல காலம் பிறக்கும் என்ற ராகுலின் கருத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. காங்கிரசிற்கு இனி ஏது நல்ல காலம்? ஊழல், முறைகேடுகள், கொள்கை முடக்கம், செயல்பாடற்ற தன்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் காங்., ஆட்சி இழக்க காரணம். இதெல்லாம் நல்ல காலமா? 2019 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என காங்., பகல் கனவு காண்கிறது. 2019 அல்ல 2090 ம் ஆண்டு ஆனால் கூட காங்கிரசால் இனி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது,‛‛ என, தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: '' In the year 2019, not in 2090, but Congress can not come to power again, '', Union Minister Venkaiah Naidu said.