புதுடில்லி: வேட்பாளர்கள் வாரத்திற்கு ரூ.2 லட்சம் வரை பணம் எடுக்க அனுமதிக்க கோரி தேர்தல் ஆணையம் அனுப்பிய கோரிக்கையை ஆர்.பி.ஐ., நிராகரித்தது.
5 மாநில தேர்தல்:
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்.,ல் துவங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.
வேட்பாளர் செலவு உச்சவரம்பு:
தேர்தல் ஆணைய விதிகளின்படி, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் நபர் ஒருவருக்கு ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய முடியும். கோவா, மணிப்பூர் மாநில வேட்பாளர்கள் நபர் ஒருவருக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்ய முடியும்.
ஆர்.பி.ஐ., கட்டுபாடுகள்:
மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் அறிப்பை தொடர்ந்து வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தனிநபர் தனது கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக எடுக்க முடியும்.
கோரிக்கை நிராகரிப்பு:
இந்நிலையில், 5 மாநில தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த உச்ச வரம்பை அதிகரித்து வாரத்திற்கு 2 லட்சம் ரூபாய் எடுக்க அனுமதிக்க கோரி தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் அனுப்பியது. இந்த கோரிக்கையை ஆர்.பி.ஐ., நிராகரித்தது.
English summary:
NEW DELHI: The candidates are allowed to take money for a week, demanding Rs 2 lakh, the EC sent a request RBI rejected.