பொள்ளாச்சி: ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ரேக்ளா பந்தயத்தை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். தற்போது ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த வேண்டும் என்று கோரி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நேற்று, பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரியில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் சுமார் 10க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டியில் வந்ததுடன், காரச்சேரியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரேக்ளா நடத்தினர். அப்பகுதி பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து ரசிகர் மன்றம் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான தடைய நீக்ககோரி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் காலை முதல் மாலைவரை அறப்போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், ஜல்லிக்கட்டை மீட்போம், விவசாயத்தை காப்போம் என கோஷமிட்டனர்.
English summary:
Pollachi: jallikattu and banned to hold rekla bet, the bet rekla Pollachi farmers to suffer in the last few years. Race rekla currently hold jallikattu and demanded that the various political parties and volunteers, have been agitating for the public.