புதுடில்லி : உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 4 ம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் நேற்று (ஜனவரி 04) அறிவித்தது. இந்நிலையில் தேர்தலுக்கு முன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தவும், பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தேர்தலும் பட்ஜெட் தாக்கலும் :
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் ஜனாதிபதியின் பரிந்துரையை ஏற்று, பட்ஜெட் தாக்கல் தேதியை வழக்கமான பிப்ரவரி இறுதி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 1 ம் தேதிக்கு மத்திய அரசு மாற்றியது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி துவங்கும் எனவும், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ம் தேதி தாக்கலாகும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் உ.பி., பஞ்சாப், கோவா, உத்திரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 வரை நடக்கும் எனவும், மார்ச் 11 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி :
பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாநில தேர்தலுக்கு முன் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது எனவும், தேர்தல் முடிந்த பிறகே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. பிப்ரவரி 4 ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என கருத்து தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக இன்று (ஜனவரி 05) காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளன.
English Summary:
NEW DELHI: Uttar Pradesh and Punjab states, including 5 in the first assembly elections will be held on February 4, the Election Commission yesterday (January 04) announced. The elections to be held before the federal budget, the budget and to file the opposition parties have protested on February 1.