மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கோப்பை வென்றார். இதன் மூலம், 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் நடால் போராட்டம் வீணானது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரரை (17வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை பெடரர் 6-4 என கைப்பற்றினார். இதற்கு, அடுத்த செட்டை 6-3 என வென்று நடால் பதிலடி தந்தார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர், மூன்றாவது செட்டை 6-1 என தன்வசப்படுத்தினார்.
தனது ஆக்ரோஷ ஆட்டத்தால் நான்காவது செட்டை நடால் 6-3 என வென்று காட்டினார்.இதனால், வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் விறுவிறுப்பு அதிகரித்தது. இதில் துடிப்பாக செயல்பட்ட பெடரர் 6-3 என தன்வசப்படுத்தினார். முடிவில், பெடரர் 6-4, 3-6, 6-1, 3-6 , 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். தவிர, 5வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை கைப்பற்றினார்.

English Summary:
Melbourne: Roger Federer of Switzerland at the Australian Open tennis singles and won the Cup. Thus, the 18th Grand Slam title captured. Nadal final at the hopeless struggle.
Australian Open Grand Slam tennis tournament held in Melbourne. The men's singles final at the 9th spot in the rankings Nadal of Spain, Switzerland, the Fed (17th place) are met.