
கே: ஞாயிற்று கிழமை அன்று ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளது. ‛ஜல்லிக்கட்டை நானே துவக்கி வைப்பேன்' என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எனவே, இனிமேல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா?
ப: எல்லா நேரத்திலும் எங்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்பு உள்ளது. எங்கள் சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்களின் ஆலோசனைபடி செயல்படுவோம்.
கே: சனிக்கிழமை அவசர சட்டத்தை கொண்டு வந்து, ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட்டை நடத்தி விட்டால் உங்களால் என் செய்ய முடியும்? வார இறுதி நாட்களில் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாதே?
ப: சட்டப்படி என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்து விட்டாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடுவோம். ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தலும் அடங்கும் என்றே, 2014ல் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதை மக்களிடம் எடுத்து கூறுவதில் இருந்து எங்களை யாரும் தடுக்க முடியாது.
கே: சென்னை மெரினாவில் போராடும் இளைஞர்கள், ‛ பீட்டாவை தடை செய்ய வேண்டும்' என, கூறுகின்றனர். தமிழகத்தில் உங்கள் அமைப்பை வில்லனாக சித்தரித்துள்ளனர். இது உங்களுக்கு ஆச்சரியத்தை தருகிறதா?
ப: ஆமாம். உண்மைதான். இது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பீட்டா அமைப்பு, ஒரு தன்னார்வ அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் சட்டத்தை இயற்றுவதுஇல்லை; அமல்படுத்துவதும் இல்லை. சட்டப்படி தான் நாங்கள் நடக்கிறோம்.
கே: உங்களுக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்புக்கு பின்னணியில் சதி ஏதேனும் உள்ளது என்ற சந்தேகம் இருக்கிறதா
ப: உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சிலர் மிகவும் தீவிரமாக உள்ளனர். அவர்கள் தான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எளியவர்களை தாக்கியும், எதிர்த்தும் பேசி வருகின்றனர்.
கே: மத்திய அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
ப: நாங்கள் சுத்தமானவர்கள். இந்த நாட்டில் பின்பற்றப்படும் சட்டத்தின்படி செயல்படுகிறோம். நாங்கள் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. விலங்குகளின் நலனுக்காக நாங்கள்போராடும் போது, எதை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டும்.
கே: பீட்டா அமைப்பிற்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்கள் வந்துள்ளதா?
ப: ஆமாம். ஏராளமான கொலை மிரட்டல் போன் அழைப்புகள் வந்துள்ளன. போனில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசுபவர்கள் ஆபாசமாக பேசுகின்றனர். எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுராவுக்கு கற்பழிப்பு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இது குறித்து நாங்கள் இன்னும் போலீசில் புகார் செய்யவில்லை. நாங்கள் மற்ற பணிகளில் தீவிரமாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: Over the past four days, 'beta' members have been threatened with death and rape, 'and continue to fight against Jallikattu, Beta said the director, Dr. vimanil. English Web Manilal magazine interview follows: