புதுடெல்லி - டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்தொடர்ந்து நிலவும் கடும் கடும்பனிமூட்டம் காரணமாக, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒருமாதமாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், இன்றும் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக 55 ரயில்கள் தாமதமாக புறப்படுகின்றன.
22 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 6 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், 6 உள்நாட்டு மற்றும் 7 பன்னாட்டு விமானங்கள் காலதாமதமாகவும், 2 உள்ளுர் விமானங்களின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல் உத்திரபிரதேச மாநிலம் லக்னோ ,கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடும் குளிரின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் சாலைகளின் ஓரம் நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலும் கடும் பனி மூட்டும் நிலவி வருகிறது.அக்டோபர், மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய பருமழை பொய்த்து போனதாலும், பனியால் நீர் நிலைகள் உறைந்துபோவதாலும் பழம்பெரும் நதியான ஜீலம் நதி சுமார் 60 வருடங்கள் இல்லாத அளவிற்கு வறண்டு காணப்படுகிறது.
English summary:
New Delhi - Delhi, Uttar Pradesh, including the North states due to the severe mist air and rail transport services severely affected..