சென்னை, சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்திருந்தால் 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனர் மற்றும் மின்-ஆளுமை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 545 நிரந்தர சேர்க்கை மையங்களை தமிழ்நாடு மின் ஆளுமைமுகமையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிர்வகித்து வருகின்றன. 1.10.2016 முதல் 31.12.2016 வரை 9,91,924 நபர்களுக்கு ஆதார் எண்ணிற்கென பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
12.9.2016 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உரியத் தகவல்களை 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்.எனவே மேற்கூறிய ஆதார் வழிமுறைகளின் படி பொதுமக்கள் செயல்பட ஏதுவாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நாளை (4-ந்தேதி) முதல் நேரில் சென்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உரியத் தகவல்களை அளித்துப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இது கட்டண மில்லா சேவையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English summary:
Chennai, young 15-year-old completed the Aadhar card is taken back within 2 years from the day the government announced that the fingerprints need to be registered.