சென்னை : இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் வயது வேறுபாடின்றி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய அனைவரின் ஒருமித்த குரலாகவும், எதிர்ப்பு குரலாகவும் ஒலிக்கும் ஒரே வாசகம் 'பீட்டாவை தடை செய்' என்பது தான்.
பீட்டாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு :
ஜல்லிக்கட்டு எந்த அளவுக்கு ஆதரவு பெருகி வரு
கிறதோ, அதே அளவிற்கு பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குரலும் வலுவாக ஒலித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பீட்டாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்களில் பீட்டா குறித்து பரப்பப்பட்டுள்ள தகவல்கள் ஆகும்.
சமூக வலைதளங்களால் இணைந்த இளைஞர்களாலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த போராட்டம் இந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பீட்டா குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீட்டாவை தடை செய்தே தீர வேண்டும் என தமிழக இளைஞர்கள் முழுமூச்சுடன் போராட்டத்தில் இறங்கி வரும் நிலையில், கடையடைப்பு போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவசர சட்டம் கொண்டு வரவும் அலங்காநல்லூர் கிராம மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு இன்று மாலை வரை கெடு விதித்துள்ளனர்.
பீட்டாவுக்கு எதிராக மட்டுமின்றி, பீட்டாவை ஆதரிப்போருக்கு எதிராகவும் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
English summary:
Chennai: youth, college students and the general public, as traders took to the road in support of all parties, regardless of age, have been fighting Jallikattu. Jallikattu everyone's voice in support of the landings, and the sound of the voice of opposition to the single phrase: 'clog beta' is that.