புதுடில்லி: குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், அணிவகுப்பில் பங்கேற்ற முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 பாண்டு வாத்தியங்கள் முழங்க நிகழ்ச்சி நடந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் பழக்கம், சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. ராஜ்பாத்தின் வடக்கு தெற்கு கட்டட வளாகங்களுக்கு நடுவே உள்ள பகுதியில் நடந்தது.
இந்நிகழ்வில் முப்படையின் பேண்ட் குழுவினர், டிரம்பெட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. பின் முப்படைகளின் வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படை வீரர்களின் மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை ஆயிரகணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
English summary:
NEW DELHI: In the evening of the 3rd day of the Republic Day parade took place in part in the three armed forces, returning to camp. The event took place in the 16 Bond playing drums.