புதுடெல்லி - அதி முக்கிய வி.ஐ.பிக்கள் பயணம் செய்வதற்கான நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியின் உறவினர் சஞ்சீவ் தியாகிக்கும், வழக்கறிஞருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது. வழக்கை விசாரணை செய்யும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் இந்த ஜாமீன் உத்தரவினை அளித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி(யு.பி.ஏ.) அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின் போது வி.வி.ஐ.பிக்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்களை பிரிட்டனின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் போது திட்டமிடப்பட்ட உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களை உருவாக்க வேண்டும் என்ற விதி முறையை தளர்த்தி மாற்றம் செய்யப்பட்டது.. இந்த விதிமுறை தளர்வு விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி. தியாகி இருந்த போது மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா ஒப்பந்தம் செய்த 12 அதி நவீன ஹெலிகாப்டர்கள் ரூ3600 கோடியில் வாங்க முடிவு செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய தொகைக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனம் ரூ 300 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி மற்றும் வழக்கறிஞர் கவுதம் கைத்தான் ஆகியோருக்கு லஞ்ச விவகாரத்தில் தொடர்பிருப்பதாக சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்தது. இந்த 3 பேரையும் சி.பி.ஐ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதியன்று கைது செய்தது.
இவ்வழக்கில் டெல்லி நீதி மன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் கூடுல் சொலிசட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகிறார். அவர், சஞ்சீவ் தியாகிக்கும், கைத்தானுக்கும் ஜாமீன் வழங்க முன்னர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்கு ஜாமீன் அளித்தால் அந்த நபர்கள் சாட்சிகளில் ஆதிக்கம் செலுத்தி வழக்கை திசை திருப்புவார்கள் அவர் கோர்ட்டில் வாதாடினார்.இதில் குற்றம் சாட்டப்பட்ட கைத்தான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரமோத் குமார் துபே சி.பி.ஐயின் வாதத்தை நிராகரித்தார்.
English Summary:
New Delhi -VIP more important for travel in connection with the acquisition of modern helicopters, arrested in bribery case of former air force commander S.P relative Sanjeev Tyagi, the prosecutor was given bail. Arvind Kumar, CBI special court judge who investigated the case, gave the bail order.