புதுடில்லி : டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை கேட்டறிவதற்காக இலவச உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட்டும் வருகிறது. ரூ.50-ல் இருந்து 3000 ரூபாய் வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் தெரிவித்தார். இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை கேட்டறிவதற்காக இலவச உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. “14444” என்பது அந்த இலவச எண் ஆகும்.
இந்த இலவச உதவி எண் மூலமாக இ-வாலெட், ஆதார் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறியலாம். தொலைத் தொடர்பு துறை மற்றும் நாஸ்காம் மென்பொருள் சங்கம் இணைந்து இந்த இலவச எண்ணை அறிமுகம் செய்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு துறை செயலாளர் தீபக், “இந்த உதவி எண் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பயன்பாட்டில் இருக்கும். விரைவில் நாடு முழுவதும் மற்ற மொழிகளில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்” என்றார்.
English summary:
New Delhi, also heard the doubts of the customers of the digital transaction will be introduced free assistance number