சென்னை - தமிழர் நாளாம் பொங்கல் நாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2017-ஆம் ஆண்டு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 717 சேலைகள் மற்றும் ஒரு கோடியே 62 லட்சத்து 24 ஆயிரத்து 223 வேட்டிகள் வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில், 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்.
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட திட்டம் :
விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் நாளான பொங்கல் நாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது - விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் பாலிகாட் சேலைகளை வழங்கிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
ரூ. 486 கோடி நிதி ஒதுக்கீடு:
அதன்படி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, 2017-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 717 சேலைகளும், ஒரு கோடியே 62 லட்சத்து 24 ஆயிரத்து 223 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்கென தமிழ்நாடு அரசு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதலமைச்சர் துவக்கிவைத்தார் :
பொங்கல் நாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் . ஓ.எஸ். மணியன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் மதி ஷீலா பாலகிருஷ்ணன், முதன்மைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான முனைவர் கொ. சத்யகோபால், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் .ஹர்மந்தர் சிங், வருவாய்த் துறைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விலையில்லா வேட்டி-சேலைகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
English summary:
Chennai - Tamil Pongal anniversary days of free dhoti, sari Under the scheme, 486 million in the year 2017 at a cost of 36 lakh rupees one crore 62 lakh 42 thousand 717 crore 62 lakh 24 thousand 223 dhoti and saris and the issuing of a symbol, a Chief Minister. Panneerselvam secretariat, 7 dhoti and saris distributed free of cost to families.