சென்னை: - நாளை முதல் 9 ம்தேதி வரை மாவட்ட, ஒன்றிய, நகர பேரூராட்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் வரை கட்சி நி்ர்வாகிகளை சந்திக்க இருப்பதாக அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
சசிகலா தேர்வு:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த 29 ம்தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார், இதைத்தொடர்ந்து கடந்த 31 ம்தேதி சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிய விழாவில் சசிகலா அ.தி.மு.க பொதுசெயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் கட்சியின் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வரும் 4 ம்தேதி முதல் 9 ம்தேதி வரை 6 நாட்கள் மாவட்ட வாரியாக கட்சியின் நிர்வாகிகளை சந்திக்க போவதாக அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
ஜெயலலிதாவின் நல்லாசியோடு அ.தி.மு.க பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இந்நிலையில் கழகப் பணிகள் குறித்து, மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், தொகுதி வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்திடும் வகையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், 4-ம் தேதி முதல் (நாளை முதல்) 9-ம்தேதி வரை மாவட்ட வாரியாக பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.
ஆலோசனைக் கூட்ட விவரம்:
1. 4-ம் தேதி காலை வட சென்னை வடக்கு வட சென்னை தெற்கு தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்கு காஞ்சிபுரம் கிழக்கு காஞ்சிபுரம் மத்தியம் காஞ்சிபுரம் மேற்கு திருவள்ளூர் கிழக்கு அன்று மாலை திருவள்ளூர் மேற்கு வேலூர் கிழக்கு வேலூர் மேற்கு திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு.
2. 6 ம்தேதி - வெள்ளி காலை, தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம்மாலை சேலம் மாநகர் சேலம் புறநகர் நாமக்கல் ஈரோடு மாநகர் ஈரோடு புறநகர்.
3. 7.ம்தேதி சனி காலை நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்கோட்டை மதுரை மாநகர் மதுரை புறநகர் மாலை கடலூர் கிழக்கு கடலூர் மேற்கு விழுப்புரம் வடக்கு விழுப்புரம் தெற்கு கிருஷ்ணகிரி தருமபுரி.
4. 8 ம்தேதி ஞாயிறு காலை திருநெல்வேலி மாநகர் திருநெல்வேலி புறநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி.
5.9 ம்தேதி திங்கள் காலை திருப்பூர் மாநகர் திருப்பூர் புறநகர் கோவை மாநகர் கோவை புறநகர் நீலகிரி மாலை திருச்சி மாநகர் திருச்சி புறநகர் பெரம்பலூர் அரியலூர் கரூர் தஞ்சாவூர் வடக்கு தஞ்சாவூர் தெற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
English summary:
Chennai - 9, first up tomorrow District, Union, Association of Secretaries from downtown panchayat and MLAs, MPs of the party would meet secretaries Shashikala AIADMK general secretary said.