சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அமைதி வழியில் சென்று கொண்டிருந்த போராட்டகளம், தற்போது போர்க்களமாக மாறியுள்ள சூழலில் இன்று மாலை 5 மணிக்கு சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அவசர சட்ட முன் வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு இந்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்படுவதாக செய்தியாளர்களிடம் பேசிய தனபால் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனவரி 27ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றார். மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் பிப்ரவரி 1ம் தேதி பதிலுரை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Jallikattu emergency law before the legislative form of a special meeting at 5 pm today to meet the accumulated information for the media briefing, said Mr. Dhanapal.