புதுடில்லி : தேசியக் கொடி நிறத்தில் மிதியடிகள் விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கிய அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய செருப்புக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கனடா இணையத்தில் இந்திய தேசியக்கொடியின் நிறத்தில் மிதியடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டமும், எச்சரிக்கையும் விடுத்தார். இதையடுத்து அந்த பொருட்களை இணையத்தில் இருந்து நீக்கிய அமேசான் நிறுவனம், அதற்காக வருத்தமும் தெரிவித்தது. இந்தநிலையில் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா கந்தியின் உருவம் அச்சிடப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புக்கள் கிளம்பினாலும், அமேசான் நிறுவனம் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.
English summary:
New Delhi: The national flag of colored sandals on Amazon's US website is shrouded in controversy with the picture of Mahatma Gandhi has been put up for sale slippers shock.