திருநெல்வேலி; ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை வெட்டிக்கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. ஆணவக்கொலை வழக்கில் தமிழகத்தில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.
திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, இளங்கோநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் 27. ரயில்வே ஊழியர். இவரும் நெல்லை தச்சநல்லூர், சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். 2016 மே மாதம் 3ம் தேதி வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டனர்.
காதலரின் அக்காள் கொலை :
மகளை தேடிய சங்கரநாராயணன் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டில் விசாரித்தனர். வீட்டில் இருந்த விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, தெரியவில்லை என்றார். ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும், கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர். இறந்த கல்பனா கர்ப்பிணியாவார். கொலையாளி சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரி. வேறு ஜாதியை சேர்ந்தவர். அவரது மகள் காவேரியை தலித் வகுப்பை சேர்ந்த விஸ்வநாதன் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த ஆணவக்கொலையாகும்.
கணவன் மனைவிக்கு தண்டனை :
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன், மனைவி செல்லம்மாள் ஆகியோரை கைது செய்தனர். வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அப்துல்காதர் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கடந்த மே மாதத்தில் நடந்த ஆணவக்கொலைக்கு எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நெல்லை கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பாராட்டுக்குரிய தீர்ப்பு:
தமிழகத்தில் சமீபத்திய ஆணவக்கொலை வழக்குகளில் முதன் முதலாக தண்டனை அறிவிக்கப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 8 மாதத்தில் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது.
English summary:
Tirunelveli; Variable Dalit caste, who married the sister of the young men of the guard who intersect court ruled that his wife was sentenced to death. This is the first judgment in the case murderer in Tamil Nadu state.