ஜம்மு : எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் வீடியோ மூலம் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பட்டினியுடன் பணி:
எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் எனும் வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், காய்கறிகளோ, தொட்டுக்கொள்ள ஊறுகாயோ வழங்கப்படுவதில்லை; வேக வைத்த பருப்பு மட்டுமே வழங்கப்படுகிறது என புகார் தெரிவித்தார். மேலும் எல்லையில் 11 மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே, மோசமான தட்பவெப்ப நிலையில் பணி புரியும் நாங்கள், பெரும்பாலும் வெறும் வயிற்றுடன் தூங்கச் செல்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்:
எல்லையை காக்கும் சிப்பாய்களான எங்களுக்கு வழங்கப்படும் அநீதி இது எனத் தெரிவித்த அவர், இந்த வீடியோ வெளியாகும்போது தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளார். முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் ரொட்டி, டீயை வீடியோவில் பதிவு செய்த யாதவ், இக்குறைகளை போக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரவு:
இதுகுறித்து டுவிட்டரில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary:
Jammu: Border Security Force soldier for their bread, tea be given not only to feed, mostly just to sleep and video stomach complaint by the tabloid said.