புதுடில்லி : கோவா சட்டசபை தேர்தலில் காங்., கட்சி சார்பில் 4 முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகின்றனர்.
உ.பி., கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. கோவா சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், ஆளும் பா.ஜ., தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது. கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப். 4ம் தேதி தேர்தல் நடைபெறும்.
காங்., பட்டியல் வெளியீடு:
இந்நிலையில் கோவா தேர்தலில் காங்,, கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. 27 பேர் இடம்பெற்றுள்ள முதல்பட்டியலில், முன்னாள் முதல்வர்கள் பிரதாப் சிங் ரானே, ரவிநாயக், திகம்பர் காமத் மற்றும் லுசின்கோ பிளேரியோ ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜ., பட்டியில்:
கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இதில் 18 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 29 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வலுவான கூட்டணி:
கோவா தேர்தலில் மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி, கோவாவில், முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக திகழும், எம்.ஜி.பி., மற்றும் ஜி.எஸ்.எம்., ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது. சிவசேனா அமைத்துள்ள கூட்டணி, கோவாவில் ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு நெருக்கடியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
New Delhi : Assembly elections in Goa Cong., 4 on behalf of former chief ministers are contesting party.