சென்னை: ஜல்லிக்கட்டிற்காக அமைதியாக போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரை, மதுரையில் அலங்காநல்லூர் தமுக்கம் மைதானம், திருச்சி, தேனி என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் 5வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் மாணவர்கள் உதவி வருகின்றனர். போராட்டகளத்தில் குவியும் குப்பைகளையும் மாணவர்களே அப்புறப்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் போராட்டம் போல் அல்லாமல், மாணவர்களின் போராட்டம் அமைதியாக நடப்பதற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால், நாடு முழுவதையும் தமிழகம் நோக்கி பார்க்க வைத்துள்ளனர்.
தொடரும் ஆதரவு:
மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். பேரணியாக, இரு சக்கர வாகனங்களிலும், இளைஞர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாணவிகளும் மெரினா கடற்கரை நோக்கி வரத்துவங்கியுள்ளனர். இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அதிகமான மக்கள் கூட்டம் உள்ளது. கடற்கரையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் உள்ளது. இதனால் கடற்கரை நோக்கி செல்லும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மதுரை தமுக்கம் மைதானத்திலும் சுமார் 2 லட்சம் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் சீர்காழியில் கொட்டும் மழையிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
English summary:
Chennai: jallikattu struggle peacefully for the youth, students and the general public are also appreciative.