அலங்காநல்லூர்: மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என நினைக்கும் தமிழக அரசு நிர்வாகத்திற்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவசர சட்டம் தேவையில்லை, நிரந்தர சட்டம் தான் தேவை என போராட்ட களத்தில் உள்ளோர் உறுதியாக தெரிவித்த பிறகும், தமிழக அரசு மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவது என கவுரவ பிரச்சனையாக கருதுவது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அலங்காநல்லூர் வாடிவாசலில் காளைகளை துள்ள விடுவது என தீர்மானித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மக்களின் கடும் எதிர்ப்பால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த இயலவில்லை. மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்வரால் அலங்காநல்லூருக்கு செல்லமுடியவில்லை. அலங்காநல்லூரை சுற்றி சாலைகளில் குழிகளை தோண்டி ஊருக்குள் நுழையாமல் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர முயற்சி காட்டிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மாபெரும் தோல்வியே மிஞ்சியுள்ளது.
அலங்காநல்லூரில் இல்லையென்றால் என்ன நத்தம் அருகே கோவில்பட்டி கிராமத்தில் நடத்துவது என்று தீர்மானித்த பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் வருவதற்கு அங்குள்ள மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நத்தம் அருகே கோவில்பட்டியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் முறை:
ஒரு கிராமத்துக்குள் செல்ல முடியாமல் முதலமைச்சர் திரும்புவது தமிழகத்தில் இதுவே முதல்முறை ஆகும். ஜல்லிக்கட்டு துவங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அலங்காநல்லூர் சென்ற போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அலங்காநல்லூர் கிராமத்துக்குள் முதல்வர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
English summary:

Alanganallur: in spite of the opposition of the people think that the government must launch jallikattu administration, CM opannirselvam heavy today. Emergency Law does not require the need for a permanent law firm said that after those in battle, despite the opposition of the people of the State Government to Tyre jallikattu launch heavy turbulence caused people to assume that the problem is the cameo. Be the first to leave the decision to the Bulls in Alanganallur vadivasal opannirselvam disillusioned.