மதுரை: தமிழகத்தில் அனைத்து தலைமை மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தினமலரில் செய்தி:
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளை முன்பு தாக்கல் செய்த மனு: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கணிப்பொறி மற்றும் இணையதள வேகம் குறைவதாக கடந்த 18.8.2016 அன்று தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
மேலும் 6.9.2016 தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில், அரசு மருத்துவமனையில் தினமும் தாமதமாக வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அனைத்து தலைமை மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியிருந்தார்.
4 மாதத்தில்...:
இந்த மனு நீதிபதிகள் கலையரசன் மற்றும் செல்வம் கொண்ட அமர்வு, அடுத்த 4 மாதத்திற்குள் அனைத்து மருத்துவமனைகளிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
English Summary:
Madurai: Tamil Nadu Chief of all the hospitals, district hospitals to implement the bio-metric system Attendance branch of the State High Court ordered the Madurai.