சென்னை - தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. முதல் நாளன்றே ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 3-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ள மாணவ-மாணவிகள் , அரசுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏழை எளிய மாணாக்கர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், பாடப்புத்தகங்களின் சுமையை குறைக்கவும், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், முப்பருவ பாடத்திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அரையாண்டு தேர்வு முடிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
புத்தகங்கள் வினியோகம் :
முதல் நாளன்றே ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒருகோடியே 20 லட்சத்து 23 ஆயிரத்து தொள்ளாயிரம் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ள மாணவ-மாணவிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தமிழக அரசுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
English Summary:
Chennai - Tamil Nadu Government and Government aided schools at the semester exam yesterday reopened after the holidays. Thus greatly Alumni is happy, expressed gratitude to the state of their costs.