புதுடில்லி: 2008 ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் உசேன் போல்ட் வாங்கிய தங்கம் திரும்ப பெறப்படுகிறது. இதன் மூலம் அவரின் ‛ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்' சாதனை பறிபோகிறது.
ஊக்கமருந்து விவகாரம்:
கடந்த 2008 ம் ஆண்டு பிஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா நாட்டின் சார்பில் உலகின் முன்னணி தடகள வீரர் உசேன் போல்ட் 4*100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார். அந்த போட்டியில் அவருடன் பங்கேற்ற நெஸ்டா கேர்ட்டர் என்ற வீரரின் ஊக்கமருத்து மாதிரியில் மெத்தில்ஹெக்சாமைன் என்ற ஊக்கமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் 454 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இருந்த சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கடந்த ஆண்டு பரிசோதிக்கப்பட்டது அதன் முடிவில் கேர்ட்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேர்ட்டர், உசேன் போல்ட் உட்பட 4 பேரின் தங்கம் திரும்ப பெறபட உள்ளது.
பறிபோனது சாதனை:
கடந்த சில மாதங்களுக்கு முன் ரியோ டி ஜெனிரோ வில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கம் உட்பட இதுவரை 9 தங்கங்களை ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசேன் போல்ட் பெற்றார். அதன் மூலம் ‛ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்' படைத்த நாயகன் என புகழ்ந்து பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய ஒரு தங்கம் பறிக்கப்படும் பட்சத்தில் அந்த பெருமையை இழக்கிறார் உசேன் போல்ட்.
English summary:
NEW DELHI: The country of Jamaica at the 2008 Olympic Games athletes will be drawn back to the gold purchased Hussein Bolt. That way he's 'hat-trick hat-trick in the' Adventure loses.