ஐதராபாத் : ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
32 பேர் பலி:
சத்தீஷ்கர் மாநிலம் ஜகதால்பூரில் இருந்து ஆந்திரா வழியாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் செல்லும் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குனேரு என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. ரெயில் என்ஜினும் அதனைத்தொடர்ந்து உள்ள 7 பெட்டிகளும் தடம் புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தது. இந்த பெட்டிகளில் பயணம் செய்த 32 பயணிகள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்தனர்.
மீட்பு பணி துரிதம்:
தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினரும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ரூ.5 லட்சம் இழப்பீடு:
இந்நிலையில் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு அம்மாநிலமுதல்வர் சந்திர பாபு நாயுடு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ2.லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
English summary:
Hyderabad: hirakhand express, Chandra Babu Naidu, Chief Minister of the accident victim's family said that a compensation of Rs 5 lakh.