புதுடெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சட்ட அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை டெல்லி சென்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். அதற்கான வரைவு மசோதாவையும் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து நேற்று தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினர்.
இந்த அழுத்தத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய சுற்றுப்புறசூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவ் நேரடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவது குறித்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். அதை பரிசீலனை செய்து எங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளோம். அதை தொடர்ந்து மீண்டும் அந்த பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அவர்கள் தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்வார்கள். இவ்வாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த வரைவு மசோதாவுக்கு, மத்திய சட்ட அமைச்சமும் நேற்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இந்த அவசர சட்ட வரைவு மசோதா உடனடியாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. அவர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார். இதனால் ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் எனத் தெரிகிறது.
ஒரு வாரம் தீர்ப்பு வழங்கக்கூடாது : அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு
வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ள தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி நேற்று ஆஜரானார். அப்போது அவர் “ ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் மக்கள் உணர்வு தூண்டப்பட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்னையை நிர்வாக ரீதியாக தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.
இந்த விஷயத்தில் ஒரு நிரந்தர முடிவு எட்டப்பட்டு சுமூகமான நிலை ஏற்படும்வரை ஜல்லிக்கட்டு வழக்கில் குறைந்த பட்சம் ஒரு வாரம் எந்த தீர்ப்பையும் வழங்கக்கூடாது. நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்றார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவரும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் தடை எதுவும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
English Summary:
New Delhi: The Union Environment Ministry to take the necessary steps to jallikattu emergency law, the law ministry has approved. The draft bill was tabled. It is followed by Tamil Nadu MPs yesterday met Union home minister.