புதுடில்லி: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 44 பேர் லட்சம் பேர் பயன் அடைய வாய்ப்பு உள்ளதாக கிராமப்புற வளர்ச்சி செயலாளர் அமர்ஜீத் சின்ஹா தெரிவித்தார்.
இலவச கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பு:
இதுகுறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனைடைய இருக்கும் அனைவருக்கும் இலவச வீடு மட்டுமின்றி, இலவச கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அடுத்த நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா:
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகள் அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் சமவெளிப் பகுதிகளில் வசிப்பவர்களாக இருந்தால் 1.3 லட்சமும், மலைப்பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால் ரூ 1.5 லட்சமும் வரவு வைக்கப்படும். டாய்லட் கட்டிக் கொள்ள கூடுதலாக ரூ 12,000 வழங்கப்பட உள்ளது.
சிறப்பு பயிற்சி:
முதலில் 33 லட்சம் பேர் மட்டுமே பயனடைய திட்டம் வகுக்கப்பட்டது. தற்போது 44 லட்சம் பேர் பயனடையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட ஏதுவாக மத்திய அரசு 30,000 கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
New Delhi: The central government's Pradhan Mantri Awaz Yojana, a housing scheme, everyone is likely to benefit the 44 million people of the rural development secretary Amarjeet Sinha said.