சென்னை: நீங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதால் நான் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் உள்ளேன் என ஆதரவாளர்கள் மத்தியில் தீபா நேற்று பேசினார். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி தனது அரசியல் பயணத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதி முக்கிய முடிவு அறிவிப்பேன் என தெரிவித்தார். அதன்படி அன்று ஜெயலலிதா பெயரில் புதிய கட்சியோ அல்லது இயக்கமோ ஆரம்பிப்பார் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்று எந்த அறிவிப்பும் அவர் வெளியிடவில்லை. மாறாக, அரசியலில் குதித்துவிட்டேன், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டறிவேன் என்றார்.
இதனால் தீபா ஆதரவாளர்கள் உற்சாகம் இழந்தனர். இதற்கிைடயில், தீபா தன் முடிவில் பின்வாங்கிவிட்டதாகவும், அதனால் தான் கட்சி ஆரம்பிப்பதில் தாமதிக்கிறார் எனவும் சில தரப்பினர் பேசிக்கொண்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று முன்தினம் ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பரபரப்பாக பேசினார். அவர் பேசுகையில், என்னை பற்றி தேவையில்லாத வதந்திகள் பரப்புகின்றனர். அதை நம்பாதீர்கள், எத்தனை தடை வந்தாலும் மக்கள் பணி செய்வேன் என்றார். இதைகேட்ட அவரது ஆதரவாளர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பணியில் வேகம் காட்ட தொடங்கி உள்ளனர். அதன்படி, வட்டம், ஒன்றியம், நகரம் என ஊர், ஊராக சுற்றி ஆதரவாளர்களை உறுப்பினராக்கி வருகின்றனர். மேலும் தீபாவின் சுற்றுப்பயணத்தின்போது ஜெயலலிதாவுக்கு வருவதை போல் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களை உற்சாகமூட்டும் வகையில் நேற்று முதல் அந்தந்த மாவட்ட ஓருங்கிணைப்பாளர்களுக்கு பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, நாகப்பட்டினம், சிவகங்கை, மானாமதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தீபாவை சந்திப்பதற்காக அவர் இல்லம் முன்பு குவிந்தனர். சென்னையில் மாலை 6 மணி அளவில் பால்கனிக்கு வந்த தீபா ஆதரவாளர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார். அவர் பேசுகையில், ‘’தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவளித்து வருவது உற்சாகமாகமும், சந்தோசமும் அளிக்கிறது. மக்கள் பணி செய்ய எத்தனை தடை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து என் பணியை நிறைவேற்றுவேன். ஜெயலலிதா புகழ் மற்றும் பெயரை காப்பாற்றுவேன். தொடர்ந்து உங்களின் கருத்துக்களை கேட்டறிேவன்’’’’ என்றார்.அப்போது கீழே இருந்து தொண்டர்கள், தீபா நீங்கள் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று கோஷமிட்டனர். அதை கேட்ட தீபா, நீங்கள் மனது வைத்தால் அது நடக்கும் என்றார்.
English Summary:
Chennai: If you continue to provide support to me and I'm excited, I'm happy, and among supporters that Deepa had yesterday. Earlier mgr birthday on January 17, said the key to announce the results. Accordingly, she called on his supporters to launch a new party or movement was greatly anticipated. But he has not issued any notice of such. Instead, I jumped into politics, he will ask the opinions of supporters continued to tour throughout the state.