லண்டன் - ஆபாசமாக இருப்பதாக கருத்தப்பட்டதால், பேஸ்புக் இணைய தளத்தில் உள்ள நெப்டியூன் சிலை படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரோமானியர்களின் கடவுள்:
ரோமானியர்களின் கடல் கடவுளாக ‘நெப்டியூன்’ சித்தரிக்கப்பட்டுள்ளார். இவரது உருவ படமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பொலோக்னாவில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தினால் ஆன இச்சிலை 3.2 மீட்டர் உயரத்தில் உடையது. அந்த சிலையின் படத்தை இத்தாலியை சேர்ந்த கலை வரலாற்று ஆசிரியர் எலிகா பற்பரி என்ற பெண் ‘பேஸ் புக்’ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆபாசமாக உள்ளது:
பலோக்னாவின் பாரம்பரிய கதைகள், புதுமைகள் என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் நெப்டியூன் சிலை படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் நெப்டியூன் உருவசிலை படத்தை நீக்கும் படி அவருக்கு ‘பேஸ்புக்’ இணைய தள நிர்வாகம் தெரிவித்தது. நெப்டியூனின் உருவ சிலையின் படம் ஆபாசமாக உள்ளது. அது ‘பேஸ்புக்’கின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளது.
சிலை படம் நீக்கம்:
மேலும், இந்த படத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ கில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த சிலையின் படம் ஆபாசமாகவும் உடலின் பெரும்பாலான தேவையற்ற பாகங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து பேஸ் புக் இணைய தளத்தில் நெப்டியூன் கடவுள் சிலை படம் நீக்கப்பட்டது. இது குறித்து எலிசா பார்பரி ‘பேஸ்புக்’ இணையதளத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் “ஆடையுடன் கூடிய நெப்டியூன் சிலையை பேஸ்புக் மறு படியும் உருவாக்கட்டும்“ என கூறியுள்ளார்.
English Summary:
London - was considered to be obscene, and the Neptune statue of the film have been laid on the Facebook Web site.