சென்னை - நாடுமுழுவதும் ஓட்டுநர் உரிமம், புதுப்பிப்பு, வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாகனப் பதிவு:
தமிழகத்தில் மொத்தம் 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) உள்ளன. இது தவிர 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக 6,210 பேர் புதிய வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர். வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. வாகனங்களுக்கான வரி வசூல் மாநில அரசுக்கும், இதர கட்டணங்களின் வசூல் மத்திய அரசிடமும் வழங்கப்படுகிறது.
சேவை கட்டணம் உயர்வு:
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாற்றம், வாகன பதிவு, பயிற்சி பள்ளி தொடங்குதல் மற்றும் புதுப்பித்தல் உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமல்:
இதற்கான உத்தரவை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல சேவைகள் உயர்ந்துள்ளதால், ஓட்டுநர் பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary:
Chennai - nationwide driver's license renewal, vehicle registration fees for services, including a 13 times increased the number of federal government. The hike comes into effect from yesterday.