புதுடில்லி : கடந்த, 115 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2016ல், வெயில் வறுத்தெடுத்துள்ளது. அந்த ஆண்டில், பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணமாக உயிரிழந்த, 1,600 பேரில், வெயில் காரணமாக மட்டும், 700 பேர் பலியாகி உள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம், 2016ம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது:
* கடந்த, 1901ம் ஆண்டில் இருந்து, பதிவான வெப்ப நிலைகளுடன் ஒப்பிடுகையில், 2016ல், வெப்பம் அதிகம். ஆண்டு சராசரியைவிட, 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெயில் பதிவானது
* மிகவும் அதிகமாக, ராஜஸ்தான் மாநிலம், பலோடியில், 51 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது
* கடந்த, 2016ல், கடும் மழை, அதிக வெயில் என பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணங்களால், 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
* இதில், 40 சதவீதம் பேர், மழை, வெள்ளத்தால் இறந்தவர்கள்; 40 சதவீதம் பேர், கடும் வெயிலுக்கு பலியாகினர்
* வெயிலுக்கு, 700க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில், ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
* கடும் குளிருக்கு, 53 பேரும், மின்னல் தாக்கி, 415 பேரும் பலியாகினர். ஒடிசாவில், 132 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்து உள்ளனர்
* பீஹாரில், 146 பேர் உட்பட, கடும் மழை, வெள்ளத்துக்கு, 475 பேர் உயிரிழந்துள்ளனர்
* கடந்த ஆண்டில், தமிழகத்தை தாக்கி, 18 பேரை பலி வாங்கிய, வர்தா புயல் உட்பட, வங்கக் கடலில், நான்கு புயல்கள் ஏற்பட்டன
* கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில், இயல்பைவிட, 55 சதவீதம் குறைவான அளவு மழை பெய்தது. கடந்த, 1901ல் இருந்து பதிவான, மிகவும் குறைவான மழையளவுகளில், இது 5வது இடமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English summary:
New Delhi: In the past, the absence of 115 years, in 2016, sunlight . In that year, different climates, the temperature due to the death of 1,600 people, and not only because of the sun, 700 people have died.