சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடந்த முழு கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற்றது.
ஆதரவு:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க நடவடிக்கை எடுக்கவும், பீட்டா அமைப்பை தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து நடந்து வரும் போராட்டத்தில், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், பெண்கள் என தாங்களாக முன்வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக போக்குவரத்து சங்கங்களும் இன்று ஸ்டிரைக்கல் ஈடுபட போவதாக அறிவித்தன.
முழு வெற்றி:
இதன்படி இந்த போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இந்த போராட்டம் அமைதியாக நடந்தது. உணவகங்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், நகைக்கடைகள் மற்ற கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடை உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து அடைத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தனர்.
மின்சாரம், குடிநீர் மற்றும் மருந்து கடைகள் ஆகியவற்றி்ன் செயல்பாடுகள் தடுக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள், கால் டாக்சிகள் இயங்கவில்லை. சினிமா தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது.
English summary:
Chennai: Tamil Nadu Jallikattu in support of the strike was a success across the entire edge.