சென்னை: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில், கூடுதலாக பணிபுரிந்த நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
50 நாட்கள்:
கடந்த நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி, கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து பணப்புழக்கம் பாதிக்கப்பட்டதால், வங்கிகளில் இருந்து பணம் எடுக்க அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில், கூடுதலாக பணிபுரிந்த நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
கூடுதல் சம்பளம்:
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 50 நாட்களில் வங்கி ஊழியர்கள் 12 முதல் 18 மணி நேரம் வரை பணி புரிந்தனர். சில வங்கிகள் கூடுதலாக பணியாற்றிய நேரத்தை ஓவர் டைமாக ஏற்றுக் கொண்டது. வேலை நேரத்தை தாண்டி கூடுதலாக பணிபுரிந்த நேரத்திற்கு வங்கிகள் சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: The bill on the withdrawal measure was kept in force for 50 days, in addition to salary, working hours, demanding that the Bank Employees' Association.