புதுடில்லி: காதி கிராம தொழிற்சாலை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட காலண்டர் மற்றும் டைரியில், மகாத்மா காந்தி படத்திற்கு பதில், பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் படம்:
இந்த கமிஷனர் அலுவலகம் வருடந்தோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடுவது வழக்கம். இந்த காலண்டரில், மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்றுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும். கடந்த 1920 ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகாத்மா காந்தி நடத்திய சுதேசி போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் மகாத்மா படம் இடம்பெற்றிருக்கும்.
தற்போது, அந்த படத்திற்கு பதில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்றுவது போல் படம் இடம்பெற்றுள்ளது.
வழக்கமானது:
இது தொடர்பாக காதி கிராம தொழில் கமிஷன் தலைவர் குமார் சக்சேனா கூறுகையில், இது சாதாரணமான நடவடிக்கை தான். கடந்த காலங்களிலும் இதுபோல் இடம்பெற்றுள்ளது. காதி அமைப்பு காந்தியின் கொள்கைகள், திட்டங்கள் அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் உயிர்நாடியே மகாத்மாதான். எனவே, மகாத்மா காந்தியை புறக்கணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை.
பிரதமர் மோடியும் கடந்த பல நாட்களாக காதி உடையை அணிகிறார். வெளிநாட்டினர் மத்தியில் இதனை பிரபலப்படுத்தியுள்ளதுடன், காதியின் தூதர்போன்று செயல்படுகிறார் எனக்கூறினார்.
English summary:
New Delhi: Khadi Village Industrial Commissioner's Office published the calendar and diary, text, Mahatma Gandhi replied, Modi has the picture.