புதுடில்லி: மத்திய அரசு துறைகள் தாமதமாக பதில் அளிப்பதாக, எம்.பி.,க்கள் சிலர், பிரதமர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளனர்.
விதிமுறை:
பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனுப்பும் எத்தகைய கடிதத்தையும், அரசு துறைகள், 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்குள் தக்க பதில் அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த நடைமுறையில் தாமதம் ஏற்படும் என தெரிந்தால், இடைக்கால பதில் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும். அந்த பதிலில், சரியான தீர்வு எப்போது அளிக்கப்படும் என்பதற்கான தேதியை குறிப்பிட வேண்டும். எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்கள், அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள் உள்ளிட்டவற்றை முறையான ஆவணங்களாக பராமரிக்க வேண்டும்.
குற்றச்சாட்டு:
இந்நிலையில், தாங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு குறித்த காலத்தில், அரசு துறைகள் பதில் அனுப்புவதில்லை என குற்றஞ்சாட்டி, எம்.பி.,க்கள் சிலர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, இவ்விவகாரத்தை உயரதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
கடிதம்:
இது தொடர்பாக, வடகிழக்கு மாநிலங்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அனைத்து அரசு துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary:
NEW DELHI: The Central Government departments in the late reply, MPs, some of whom have complained to the Prime Minister's office.