மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரையில் அலங்காநல்லூரை சேர்ந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு தொடர்பாக அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 241 பேர் கைது செய்யப்பட்டு வாடிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். இவர்களை விடுதலை செய்வதாக போலீசார் இன்று அறிவித்தனர். ஆனால் அவர்கள் விடுதலையாக மாட்டோம் என சில கோரிக்கைகளை முன்வைத்து மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை என்ன ?
மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும். வாடிவாசலில் 5 மாடுகளை அவிழ்த்து விட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த கம்யூ கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ., மற்றும் நிர்வாகிகள் அண்ணாத்துரை , வெங்கட்ராமன், ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்; மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு எத்தனையோ அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல்வர் வரும் வரை:
அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததை கண்டித்தும்,ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகினர். அவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர், தை முடிவதற்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது எழுந்த எழுச்சியை போல் தற்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல் கரூர் சுங்ககேட், பகுதியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடந்தது.
கோவை கொடிசியா அரங்கம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.
ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரிமாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
English summary:
Madurai: Madurai to be permitted to conduct jallikattu alanganallur were involved in the occupation. Alanganallur jallikattu including over 241 people have been arrested in various parts of the protesting police Palamedu locked up in a private hall. Police today announced they will be released. But they will not release some of the demands that are conducting sit-in hall.