இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் மீதான விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
சிவநேசதுரை சந்திகாந்தன் மீதான விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
விளக்க மறியல் உத்தரவு மேலும் இரு வாரங்கள் நீடிக்கப்பட்ட நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் 23ஆம் தேதி வரை விளக்க மறியலை நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்), முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம். கலீல் ஆகியோர் மீதான விளக்க மறியலும் அதே நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்; சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் அனுமதிக்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான சந்தேக நபருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
English summary:
In Sri Lanka, the Tamil National Alliance parliament Joseph Pararajasingham murder case after he was arrested under the Terrorism Act, the former Chief Minister of the Eastern Provincial Road called Pillaivan Sivanesathurai presentations on chandrasekaran Stir constantly extended.