புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் வரி வசூல் அதிகரித்து இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, 2016 ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக நேரடி வரிகள் வசூல் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் வரிவசூல் 25 சதவீதமாக இருந்தது. 2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நேரடி வரி வசூல் 12.01 சதவீதமாகவும், மறைமுக வரி வசூல் 25 சதவீதமாகவும் உள்ளது. டிசம்பர் மாதத்தில் மத்திய கலால் வரி 31.6 சதவீதமாக உள்ளது.
2015 ம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுங்க வரி 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. 2016 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நேரடி வரி 12.8 சதவீதம் உயர்ந்துள்ளது. முதல் 3 காலாண்டுகளில் நேரடி வரி வசூல் உயர்ந்துள்ளது. மறைமுக வரி வசூல் அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வாட் வரி வசூல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: In the current fiscal, Finance Minister Arun Jaitley today said that it would increase tax collections.