புதுடில்லி: காவிரியில் தண்ணீரை திறந்து விடாத, கர்நாடக அரசு, 2,500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்ய வழக்கில், உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், 2013ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த மனுவில், ‛21 ஆண்டுகளாக சம்பா, குறுவை பயிர்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட்டது கிடையாது. காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை அந்த அரசு எப்போதும் மதிப்பதில்லை. மத்திய அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் கர்நாடக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தடைப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.1,045.75 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.1,434 கோடி அபராதம் விதிக்க வேண்டும்.இந்த இழப்பீட்டை தமிழகத்துக்கு மொத்தமாக சேர்த்து ரூ.2,500 கோடி வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள், ஒரு வாரத்தில், சாட்சியங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்; அதன் பிறகு, நான்கு வாரங்களில், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
English summary:
NEW DELHI: dares to release water in the Cauvery, the Karnataka government, demanding compensation of Rs 2,500 crore, the State Government to file the case, the Supreme Court issued a new directive.