இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர்,'' எனக்கூறி, மீண்டும் வம்பிழுத்துள்ளார், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்.
பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், காஷ்மீர் பிரச்னை குறித்த, இரண்டு நாள் கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: காஷ்மீர், பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீரில் நியாயம் கிடைக்க, அந்த மாநில மக்கள், தொடர்ந்து மன உறுதியுடன் போராடி வருகின்றனர். நம் இதயம், காஷ்மீர் மக்களுக்காக, எப்போதும் துடிக்கும்.
காஷ்மீர் பிரச்னையில் தலையிடுவதை நிறுத்துங்கள் என, இந்தியாவிடம், உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். காஷ்மீர் இளைஞர்களின் ஹீரோவாக இருந்த, பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டது, காஷ்மீர் போராட்டத்தில், மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதை கண்டித்து, காஷ்மீரில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, இந்திய ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது; இது கண்டிக்கத்தக்கது.
காஷ்மீர் போராளிகளை, பாக்., தொடர்ந்து ஆதரிக்கும்; அது நம் உரிமை. பல நாடுகளுக்கு, நம் பிரதிநிதிகளை அனுப்பி, காஷ்மீரில் நிலவும் நிலைமை குறித்து உண்மையை விளக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
நவாஸ் ஷெரீபின் இந்த திமிர் பேச்சுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
English summary:
ISLAMABAD: '' integral part of Pakistani Kashmir, '' claiming back trouble, Bach., Prime Minister Nawaz Sharif.