புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏராளமான புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குடியரசு தின உரையில் கூறினார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்:
*இந்திய ஜனநாயகம் ஸ்திரமாக உள்ளது.
*நாம் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். சர்வதேச அளவில் சவாலான நிலை நிலவும் போதும் வலுவாக உள்ளோம்.
*உலகின் 3வது மிகப்பெரிய ராணுவம் நம்மிடம் உள்ளது.
*அறிவியல், தொழில்நுட்பத்தில் 2வது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளோம்.
*விண்வெளி ஆய்வில் சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளோம்.
*தொழில் துறையில் 10 வது இடத்தில் உள்ளோம்.
*சுதந்திர பெற்ற பிறகு கல்வி அறிவு 4 மடங்கு உயர்ந்துள்ளது.
*குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
*சராசரி இந்தியர்களின் வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
*வறுமை கோட்டு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
*இளைஞர்கள் பல கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளோடும் உள்ளனர். அவர்களுக்கு தேவையான கல்வி முறை உருவாக்கி மேம்படுத்த வேண்டும்.
*இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
*ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமைகள் உள்ளது போல் கடமைகளுக்கும் உள்ளது.
*ஊரக பொருளாதார வேலைவாய்ப்பு திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.
*ஜனநாயகத்தை மேம்படுத்த நுண்ணறிவுடன் கூடிய பார்வை தேவை.
*ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டபோதிலும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
*இந்தியாவின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, துாய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியாக பிரணாப் கடைசி உரை:
இந்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்தாண்டுடன் பிரணாப்பின் பதவி காலம் முடிவடைகிறது. இதே அவரின் கடைசி குடியரசு தின உரையாகும்.
English summary:
NEW DELHI: India's growth is implementing a number of new projects, said in a speech that the President of the Republic Day.