புதுடில்லி : கென்யாவின் விவசாயதுறை வளர்ச்சிக்காக சுமார் ரூ.683 கோடியை(100 மில்லியன் டாலர்) இந்தியா கடனுதவியாக அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா, பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று(ஜன.,11) சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோடி பேசியதாவது: இந்தியா - கென்யா இடையே, இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது., இரு நாடுகளிலும் தொழில் - வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. எந்தெந்த திட்டங்களில் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவது என்பது குறித்து இரு நாடுகளின் கூட்டு வர்த்தகக் கவுன்சில் குழு இன்று சந்தித்து விவாதிக்கும்.
ரூ.683 கோடி கடன்:
கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்காக, 100 மில்லியன் டாலர்(சுமார் ரூ.683 கோடி) கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தானது. கென்யாவின் விவசாயத் துறையில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான தொடர்பில் புதிய வடிவத்தைக் கொடுக்கும். கென்யாவில் உற்பத்தியாகும் பருப்பு வகைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
நன்றி:
மேலும் இருதரப்பிலும் சுகாதாரத்துறை, எரிசக்தி துறை மற்றும் கல்வி துறையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தியாவின் உதவிக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா நன்றி தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: Around Rs .683 crore for the development of Agriculture in Kenya (100 million dollars) in loans to India is. The agreement was signed yesterday.