சென்னை: இந்திய நீதித்துறையின் எதிர்காலம் இளம் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவிகளிடம் உள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். சென்னை பார் அசோசியேஷன் மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 2வது மாதிரி நீதிமன்ற போட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதல் பரிசை வென்ற சாஸ்திரா சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு 75 ஆயிரம் பரிசுத் தொகை, கேடயம், இரண்டாவது பரிசை வென்ற அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 ஆயிரம் பரிசுத் தொகை, கேடயம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பேசியதாவது: இளம் பெண்கள் தற்போது அதிக அளவில் சட்டம் பயின்று வருகின்றனர். அதேபோல நீதிபதி தேர்வுகளிலும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர். பெண்கள் அதிக அளவில் சட்டத்துறையை தேர்ந்தெடுப்பது என்பது நீதித்துறையின் எதிர்காலத்துக்கு நம்பிக்கைக்குரியதாக உள்ளது. இந்திய நீதித்துறையின் எதிர்காலம் இளம் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவிகளின் கையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசுகையில், ‘‘சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்கத்தான் இந்த மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இளம் சட்டக் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற அறைக்கு வந்து மூத்த வழக்கறிஞர்களின் வாதத்தை கவனிக்க வேண்டும். அது, அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலை நாடுகள் சிலவற்றில் இருப்பது போல வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். நீதித்துறை எப்போதும் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களை ஊக்குவிக்கும். வருங்காலத்தில் தமிழக நீதித்துறைக்கு திறமையான இளம் வழக்கறிஞர்கள் பலர் கிடைப்பார்கள்’’ என்றார். நிகழ்ச்சியில் சென்னை பார் அசோசியேஷன் தலைவர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, சென்னை பார் அசோசியேஷன் செயலாளர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary:
Chennai: The Indian judiciary, lawyers and law students to the heart of the future of the young woman on the Supreme Court, Justice Kurian Joseph said.