சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சாதகமாக்க முயற்சி:
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான கோரிக்கை இதுவரை அடங்கவில்லை. சென்னை மெரினா கடற்கரை, மதுரை அலங்காநல்லுார் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர்ந்து மூன்றாவது நாளாக கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை யாரும் ஒன்றிணைக்கவில்லை. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல்களை பரப்பி, இவர்கள் ஒன்று திரண்டு உள்ளனர். இது, அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் ‛பெயர்' வாங்க துடிக்கும் கட்சிகள் எல்லாம், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி எடுத்து வருகின்றனர்.
வாய்ஸ்:
போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க முயற்சிக்கின்றனர். இயக்குனர்கள் கவுதமன், அமீர், ஜி.வி.பிரகாஷ், லாரன்ஸ், நடிகர்கள் ஆர்யா, மயில்சாமி, ஆரி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, மன்சூர் அலிகான், ஆர்.ஜே.பாலாஜி, சிவகார்த்திகேயன் நேரில் சென்று இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நடிகர் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், விக்ரம் பிரபு ஆகியோர் வாய்ஸ் மட்டும் கொடுத்தனர்.
ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள், பிற அமைப்புகளின் நிர்வாகிகளை போராட்டகாரர்கள் நெருங்க விடவில்லை. நேரில் சென்ற நடிகர்களுக்கும் இளைஞர்களிடம் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. ‛இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு, இளைஞர்கள் தாங்களாக ஒன்றிணைந்ததும், தேடி வந்து ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பெயர் வாங்க முயற்சி செய்கிறார்கள்' என அங்கிருந்த இளைஞர்கள் முணுமுணுத்தனர்.
வரவேற்கும் பொது மக்கள்:
இன்று காலை வரை இந்த நிலைமை தான் காணப்பட்டது. போராட்டகாரர்களுக்கு உணவு, போர்வை, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை பலர் செய்து கொடுக்கின்றனர். ஆனால், அவர்கள் எந்த கட்சியையும், அமைப்பையும் சாராதவர்கள். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தான். இவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவிகளும் கலந்துகொண்டனர். மாணவர்களின் போராட்டம் குறித்து மத்திய அரசுக்கும் மத்திய உளவு துறை அறிக்கை அனுப்பி உள்ளது. இதுவரை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் திசை மாறவில்லை என்பதையும் மத்திய உளவுத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. எந்த வன்முறையும் இல்லாமல் இளைஞர்கள் போராடுவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
English Summary:
Chennai: Tamil Nadu unprecedented, any party, without the context of systems, Jallikattu surprise to many students and young people to have that fighting has caused some shock.