சென்னை: சசிகலா முதல்வராகும் முயற்சியில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறாரோ; அதே அளவுக்கு, தன்னை அச்சு அசலாக ஜெயலலிதாவாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளார். ஜெயலலிதாவைப் போலவே, கால் தெரியாமல் புடவை கட்டுவதில் துவங்கிய சசிகலா, அவரைப் போலவே, பின்பக்கம் தெரியாத வண்ணம் ஜாக்கெட் அணிவதில் துவங்கி, தலைமுடியை கொண்டை போடுவது, நீள வாக்கில் பொட்டு வைப்பது என, எல்லாவற்றிலும் ஜெயலலிதாவாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து, போயஸ் தோட்டத்தில் பணியில் இருப்பவர்கள் சிலர் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு மேக்கப் செய்து வந்த பெண்மணியை தனக்கான மேக்கப் லேடியாக நியமித்துக் கொண்டிருக்கும் சசிகலா, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே கிளம்பினால், முன்னதாக, இரண்டு மணி நேரத்துக்கு மேக்கப் வேலைகளில் இறங்குகிறார்.
ஜெயலலிதாவைப் போல புடவை கட்டுவதில் துவங்கி, முழுமையாக சசிகலாவை, ஜெயலலிதாவாக்கி அனுப்பும் வேலையை, மேக்கப் பெண்மணி தொடர்ச்சியாக செய்து வருகிறார். உறவுக்காரப் பெண்மணிகள் சிலரும் சசிகலாவின் மேக்கப்புக்கு அவ்வப்போது உதவி வருகின்றனர்.இப்படி எல்லா விஷயங்களிலும் தன்னை, ஜெயலலிதா போலவே ஆக்கிக் கொண்டிருக்கும் சசிகலா, தன்னுடைய முதுமையும் அதனால் முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களும் புகைப்படங்களில் எந்த இடத்திலும் தெரிந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
சசிகலா, தன்னை ஜெயலலிதாவாகவே மாற்றி விட்டார். எங்கு சென்றாலும், கடுமையான மேக்கப்போடு செல்லும் அவர், புகைப்படங்கள் மீது தீவிர கவனம் செலுத்துகிறார். இதற்காக, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதும், புகைப்படக்காரர்களை போயஸ் தோட்டம் வரவழைத்து, போட்டோ ஷூட் நடத்தினார். ஒரு வார காலம் நடந்த போட்டோ ஷூட்டில், ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு எப்படி போட்டோ ஷூட் நடக்குமோ, அதைப் போலவே எடுக்கப்பட்டது. அவர் எப்படியெல்லாம், எங்கெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுப்பாரோ, அதைப் போலவே சசிகலாவும் செய்தார்.
இருந்தபோதும், சசிகலா எதிர்பார்த்தபடியெல்லாம், போட்டோ அமையவில்லை. அதனால், அவசரத்திற்கு எட்டுப் புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்து, அதை, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தார்.
மீண்டும் ஷூட்:
கடந்த மூன்று நாட்களாக மீண்டும் போயஸ் தோட்டத்தில் போட்டோ ஷூட் ஆரம்பமாகி உள்ளது. சசிகலா முழுநேரமாக, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிறப் புடவைகளில் தோன்றி, போஸ் கொடுத்து வருகிறார் . ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்படு வருகின்றன. மெருன் கலர் புடைவை காஸ்ட்யூமிலும் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், சசிகலா சம்பந்தப்பட்ட படங்கள் விரைவில் அதிக அளவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary:
Chennai: In a bid chief minister Shashikala much intensity exercises; To that end, he is down to his attempt to jayalalithaa original print. As Jayalalithaa, Sasikala foot accidentally started in the building of a sari, like him, wearing jacket and boots in the back of unknown color, hair comb to make sense, as long by placing a bullet, and that she is attempting to become.